Connect with us

உலகம்

ஆறு நாட்களுக்கு ஆறு முறை உடலுறவு: அலிபாபாவின் அசத்தல் அட்வைஸ்!

Published

on

உலகின் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமான சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 10-ஆம் தேதியை அலி டே எனும் தினத்தை கொண்டாடி வருகிறது. அதன் நிறுவனரான ஜாக் மா இதனை முன்னின்று நடத்துகிறார். அன்றைய தினம் அலிபாபா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறார் ஜாக் மா.

கடந்த 10-ஆம் தேதி 102 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து அவர்களிடையே உரையாற்றிய ஜாக் மா வாழ்வில் வெற்றியடைய முக்கியமான ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். பணியில் சிறந்து விளங்கிட 996 என்ற மந்திரத்தைப் பின்பற்றுகிறது அலிபாபா. ஒரு நாளின் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஆறு நாட்களும் நிறுவனத்துக்காகப் பணியாற்ற வேண்டும். அதேபோல, திருமண வாழ்க்கைக்கு 669 என்ற மந்திரத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை உடலுறவு என்ற வகையில், ஆறு நாட்கள் தொடர வேண்டும் என்பதாகும் அந்த அறிவுரை.

திருமணம் என்பது வளத்தைப் பெருக்கவோ, வீடு வாங்கவோ, கார் வாங்கவோ அல்ல. திருமணம் என்பது இருவரும் இணைந்து குழந்தை பெறுவதற்கானதாகும். ஜாக் மாவின் 669 கருத்து அலிபாபாவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பல நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Cotton tote factory se especializa en la.