ஆரோக்கியம்
நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நெய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் பல தரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சமீபகாலமாக நெய்யுடன் தயாரிக்கும் காபி மற்றும் டீ போல் பல புதிய ட்ரெண்ட்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக, நெய் டீ என்பது தினசரி ஆரோக்கியம் மற்றும் சக்தியை அதிகரிக்க சிறந்த ஒரு பானமாக மாறிவிட்டது.
நெய்யில் உள்ள பியூட்ரிக் ஆசிட் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் நம் உடலின் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன், நல்ல கொழுப்புகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம், நெய் டீ குடிப்பதால் உடல் எடையை குறைப்பது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மற்றும் மன அமைதியை வழங்குவது போன்ற பல நன்மைகளை பெற முடிகிறது.
நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்:
- ஆற்றலை அதிகரிக்கும்:
நெய்யில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் விரைவாக உறிஞ்சப்பட்டு, தசைகளுக்கும் மூளைக்கும் ஆற்றல் வழங்குகின்றன. காலையில் வெறும் வயிற்றில் நெய் டீ குடிப்பது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும். - குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
நெய்யில் உள்ள ப்யூட்ரேட் அமிலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வீக்கத்தை கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சரிசெய்யும். தினமும் நெய் டீ குடிப்பது சிறந்த செரிமானத்திற்கு உதவும். - எடையை கட்டுப்படுத்தும்:
நெய் டீ பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு சேராமல், அதை எரிக்க உதவுவதால் எடை குறைய செய்கிறது. - மாதவிடாய் வலியில் நிவாரணம்:
நெய்யில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. தினசரி டீயில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து குடிப்பது சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளை சரிசெய்யும். - மனநிலையை மேம்படுத்தும்:
நெய்யின் ஃபாட்டி ஆசிட்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, மன அமைதியை தாராளமாக வழங்குகிறது. இது கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














