சினிமா செய்திகள்
அரை சதம் கடந்த அஜய் தேவ்கன்!

பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரும் நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கனின் 50வது பிறந்த நாள் இன்று.
1969-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் பிறந்த அஜய்தேவ்கன், பாலிவுட்டின் வசூல் நாயகனாக வலம் வருகிறார்.
இந்தியன் 2 படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அதன் பின்னர், அவர் தனது கால்ஷீட் பிரச்சனையால், தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஆனால், பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய ரோலில் கமிட் ஆகியுள்ளார்.
அஜய் தேவ்கனின் 50வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள், ட்விட்டரில் ஹேப்பி பர்தே அஜய்தேவ்கன் எனும் ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.
பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலமாக அஜய் தேவ்கனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




















