சினிமா செய்திகள்
ராஜமெளலி படத்தில் சீதாவாக நடிக்கும் ஆலியா பட்!

இந்தி திரையுலகின் முன்னணி இளம் நாயகியாக வலம் வரும் ஆலியா பட், ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ராம்சரண், ஆலியா பட், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி என நட்சத்திர பட்டாளங்களுடன் பிரம்மாண்டமாக பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.
இதில், சுதந்திர போராட்ட வீரர் அலுரிட்டி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சீதா எனும் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிக்கவுள்ளார்.
இதுவரை ஆர்ஆர்ஆர் பட ஷூட்டிங்கில் ஆலியா கலந்து கொள்ளவில்லை. சீதா கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னைத் தயார் படுத்தி வருகிறாராம். விரைவில் அவருடைய போர்ஷன் படமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


















