சினிமா
IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது ஒரு போட்டியையும் விடாமல் அங்கு வந்த கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பிரியங்கா மோகன் என அனைத்து நடிகைகளுடன் செல்ஃபி எடுத்துப் போட்டு சந்தோஷப்பட்ட வந்த காமெடி நடிகர் சதீஷ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய ரசிகர்.
இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறாமல் அகமதாபாத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், இங்கிருந்து ஏகப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வெறியர்கள் அகமதாபாத்துக்கு படையெடுத்துச் சென்றனர்.

#image_title
குஜராத் டைட்டன்ஸ் ஆதரவு ஜெர்ஸிகளை விட மஞ்சள் ஜெர்ஸியின் படைபலம் நேற்று முழுவதும் செம வைரலானது.
தோனியின் கடைசி ஆட்டம் இதுதான் என நினைத்தே அத்தனை ரசிகர்களும் அகமதாபாத்துக்கு படையெடுத்துச் சென்றனர். காமெடி நடிகர் சதீஷும் டிக்கெட்டு போட்டு அகமதாபாத்திற்கு பறந்து சென்றார்.

#image_title
சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லுமா? குஜராத் டைட்டன்ஸ் வெல்லுமா? என ரசிகர்கள் சண்டைப் போட்டு வந்த நிலையில், அங்க என்னடா சத்தம் என மழை குறுக்கே வந்து நேற்றைய இறுதிப்போட்டியையே நடக்கவிடாமல் செய்து விட்டது.
இதனால் மோடி ஸ்டாண்டுக்கு சென்றும் ஐபிஎல் போட்டியை பார்க்க முடியவில்லையே என மழையில் நனைந்த படி கடைசியாக மழை தான் ஜெயித்தது என வீடியோவை காமெடி நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ளார்.
இன்றைக்கு வானிலையில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தால் ஆட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
Finally The Rain Won ????????#IPL2023Finals pic.twitter.com/CQPEdthtH9
— Sathish (@actorsathish) May 28, 2023























