Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு? முழு விவரம் இங்கே!

Published

on

8வது ஊதியக்குழு 2025:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக மத்திய அரசு விரைவில் 8வது ஊதியக்குழுவை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அவர்கள் சம்பளமும், ஓய்வூதியமும் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி 16, 2025 அன்று மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளித்தது. ஆனால் இதற்கான உறுப்பினர்கள் நியமனம் இன்னும் நடைபெறவில்லை.

ஊதிய உயர்வு எப்போது?
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025ல் முடிவடைகின்றன. அதன் பிறகு, ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைகள், அரசின் ஒப்புதல் உள்ளிட்ட செயல்முறைகளால், இது 2026-இல் அல்லது 2027 தொடக்கத்தில் செயல்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், சம்பள உயர்வு 1 ஜனவரி 2026 முதல் ஏற்கனவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் எவ்வளவு?
7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக்குழுவில் இது 2.86 ஆக இருக்கலாம் என தகவல். இது உறுதி செய்யப்பட்டால், அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வு ஏற்படும்.

சிலருக்கு உதாரணம்:

  • பியூன் (நிலை-1): தற்போதைய சம்பளம் ரூ.18,000 -> புதிய சம்பளம் ரூ.51,480

  • நிலை-2 ஊழியர்கள்: தற்போதைய சம்பளம் ரூ.19,900 -> புதியது ரூ.56,914

  • நிலை-6 (நடுத்தர நிலை): ரூ.35,400 -> ரூ.1,01,244

  • ஐஏஎஸ்/ஐபிஎஸ் (நிலை-10): ரூ.56,100 -> ரூ.1,60,446

சம்பள உயர்வு எப்போது?
8வது ஊதியக்குழு பரிந்துரை மற்றும் அரசின் ஒப்புதலுக்கு பிறகு, 2026 அல்லது 2027 முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு அரியர் தொகையும் கிடைக்கும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Fethiye rent.