Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 15% கூடுதலாக பெய்துள்ள கோடை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஆச்சரியப்படும் வகையில் 1653% அதிகமாக கோடைமழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை மழை

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. மேலும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் கோடை காலமாக இருக்கும். இந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இருப்பினும் வெப்பச்சலனம் மற்றும் காற்று திசை வேக மாறுபாடு உள்ளிட்ட சில காரணங்களால் கோடை காலத்தில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழையளவு அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், வழக்கமாக பதிவாகும் 14.5 மி.மீ கோடை மழையின் அளவை விடவும், இந்த ஆண்டு அதிகமாக 16.7 மி.மீ அளவு பெய்துள்ளது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கோடை மழை 1653% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் எப்போதும் வழக்கமாக 3.2 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 686% கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வழக்கமாக 5 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 39.3 மி.மீ. கோடை மழை பதிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் வழக்கமாக 5.5 மி.மீ. கோடை மழை பெய்யும் நிலையில், தற்போது 35.6% கோடை மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விடவும் 546% அதிகமாகும். தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், கூடுதலாக கோடை மழை பெய்திருப்பது தண்ணீர்த் தட்டுப்பாட்டை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?