தமிழ்நாடு
சென்னை – கோயம்புத்தூர் இடையில் வந்தே பாரத் ரயில்.. எப்போது முதல் தெரியுமா?

இந்தியாவின் 10வது வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது.
ஏப்ரல் 8-ம் தேதி சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுவரையில் இந்தியா உழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 10வது வந்தே பாரத் ரயில் சேவையை சென்னை – கோயம்புத்தூர் இடையில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சென்னை – மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை – கோயம்புத்தூர் ரயில் தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.
மேலும் இதுதான் தான் தமிழ்நாட்டில் முழுமையாகப் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் ஆகும்.
சென்னை – கோயம்புத்தூர் வழித்தடத்தில் செல்லும் இந்த வந்தே பாரத் ரயில், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால் எவ்வளவு வேகத்தில் இந்த ரயில் செல்லும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, மதியம் 1 மணி அல்லது 1:30 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று அடையும்.
மேலும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி டீசல் புறநகர் ரயில் சேவை மற்றும், தாம்பாம் – செங்கோட்டை இடையில் வாரத்திற்கு 3 நாட்கள் செல்லும் ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடி அசைத்துத் துவக்கி வைக்க உள்ளார்.