வேலைவாய்ப்பு
திருவண்ணாமலை கோயிலில் 109 வேலை வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்குங்கள்!

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் 109 வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்குங்கள்!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பணியிடங்கள் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 109 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் 28.02.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
📋 காலியிட விவரங்கள் & தகுதிகள்
| பதவி | காலியிடங்கள் | தகுதி | சம்பளம் (₹) |
|---|---|---|---|
| தட்டச்சர் | 1 | 10-ம் வகுப்பு, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் | 18,500 – 58,600 |
| காவலர் | 70 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 15,900 – 50,400 |
| கூர்க்கா | 2 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 15,900 – 50,400 |
| ஏவலாள் | 2 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 10,000 – 31,500 |
| உபகோயில் பெருக்குபவர் | 2 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 10,000 – 31,500 |
| கால்நடை பராமரிப்பாளர் | 1 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 10,000 – 31,500 |
| உபகோயில் காவலர் | 2 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 11,600 – 36,800 |
| திருமஞ்சனம் | 3 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், ஓராண்டு சான்றிதழ் படிப்பு | 11,600 – 36,800 |
| முறை ஸ்தானீகம் | 10 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், ஓராண்டு சான்றிதழ் படிப்பு | 11,600 – 36,800 |
| ஓடல் | 2 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், ஓராண்டு சான்றிதழ் படிப்பு | 15,900 – 50,400 |
| தாளம் | 3 | தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், ஓராண்டு சான்றிதழ் படிப்பு | 18,500 – 58,600 |
| தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு) | 1 | மின்னணு & தொலைத்தொடர்பு பொறியியல் பட்டயப் படிப்பு | 20,600 – 65,500 |
| பிளம்பர் | 4 | ஐ.டி.ஐ பிளம்பர் பிரிவு | 18,000 – 56,900 |
| உதவி மின்பணியாளர் | 2 | வயர்மேன் பிரிவு ஐ.டி.ஐ | 16,600 – 52,400 |
| தலைமை ஆசிரியர் | 1 | முதுகலை பட்டம் + ஆசிரியர் பயிற்சி + 5 ஆண்டு அனுபவம் | 36,700 – 1,16,200 |
| தேவார ஆசிரியர் | 1 | 3 ஆண்டுகள் தொடர்புடைய துறையில் படிப்பு | 35,400 – 1,12,400 |
| சங்கீத இசை ஆசிரியர் | 1 | 3 வருட பட்டயப் படிப்பு அல்லது பட்டம் | 35,400 – 1,12,400 |
| ஆகம ஆசிரியர் | 1 | வேத, ஆகம 4 ஆண்டு படிப்பு + 5 ஆண்டு அனுபவம் | 35,900 – 1,13,500 |
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
✅ விண்ணப்பங்கள் இணையதளத்தில் கிடைக்கும்: https://annamalaiyar.hrce.tn.gov.in/
✅ விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
✅ முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை – 606601
✅ அனுப்ப வேண்டிய வழி: நேரிலோ அல்லது தபாலிலோ
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025























