வேலைவாய்ப்பு
RRB வேலைவாய்ப்பு 2025: 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

RRB வேலைவாய்ப்பு 2025: 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க புதிய அவகாசம்!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB) சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக, RRB சென்னை மண்டலத்திற்கு 2,694 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ஆம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத சம்பளமாக ரூ.18,000/- பெறுவர்.
முன்னதாக, விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 1, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.rrb.gov.in) விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
விரைவில் விண்ணப்பிக்கவும்!




