இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.03.2026

- நாடு முழுவதுமுள்ள NAYARA பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.5.30 டீசல் ரூ.3 விலை உயர்வு இன்று முதல்.
- இந்தியர்களின் வீடுகளில் 50,000 டன் தங்கம் இருக்கிறதாம். வீடுகளில் முடங்கியுள்ள தங்கத்தால் பொருளாதார வளர்ச்சிக்குத் தடை. – வீடுகளில் முடங்கியுள்ள தங்கத்திற்கு சில கட்டுப்பாடுகள் வரப்போகிறதாம்.
- சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் வெண்படல அழற்சி பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
- ஈரான் போரால் இந்தியாவில் மதுபானங்கள் உற்பத்தி பாதிப்பு… இருமடங்கு விலையை உயர்த்த திட்டம்…
- அணைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை – மேற்காசிய போர்ச்சூழல் குறித்தும் அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
- கவுன்சில் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்காமல் திருநர்களின் உரிமைகளைப் பறிக்கும் புதிய மசோதாவை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து திருநர்களுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கல்கி சுப்பிரமணியம் மற்றம் ரிதுபர்ணா நியோக் ஆகியோர் பதவி விலகல்.
- ரயில் பயணங்களின்போது மிடில் பெர்த் பயன்படுத்தவதில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க ரயில்வே புதிய விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மிடில் பெர்த்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு இடையுறு ஏற்படாத வகையில் அவர்களின் ஒப்புதலுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்னை எழுந்தால் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.
- தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஏப்ரல் 23 அன்று MI vs CSK போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. அதேபோல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே.4 அன்று MI vs LSG போட்டி மும்பையில் நடக்கிறது.


