Connect with us

ஆரோக்கியம்

பெராலிசிஸ் அட்டாக் என்கிற பக்கவாதம் என்கிற ஸ்ட்ரோக் எப்படி ஏற்படுகிறது? தவிர்ப்பது எப்படி?

Published

on

பக்கவாதம் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்ற அலட்சியமாக இருந்து விடாமல் அறிகுறிகள் தென்பட்டவுடன் நோயாளியைத் தகுந்த வசதியுள்ள பெரிய மருத்துவமனைக்க அழைத்துச் செல்வதே அவரின் உயிரைக் காப்பதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கக் கூடும்.

உலகளாவிய ரீதியில் மரணத்தை ஏற்படுத்தும் மற்றும் நீண்டகால ஊனத்தை உண்டாக்கக் கூடிய நோய்களில் பக்கவாதம் முதன்மையான ஒன்று. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது அல்லது மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் ஏற்பட்ட முதல் 60 நிமிடங்கள் தங்க நேரம் (The Golden Hour)  என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்திற்குள் நோயாளிக்குச் சரியான சிகிச்சை-இரத்த உறைதலை கரைக்கம் மருந்து வழங்கப்பட்டால் மூளைக்கு ஏற்படும் நிரந்தரச் சேதத்தை தடுத்து நோயாளியைப் பூரண குணமடையச் செய்ய முடியும்.

பக்கவாதம் ஏற்பட்டு முதல் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிப்பது அவசியமென்றாலும் முதல் 60 நிமிடங்களே சிகிச்சை முழுமையான பலனைத் தரக்கூடிய மிக முக்கியமான காலப்பகுதியாகும்.

பக்கவாதத்தை எளிதில் கண்டறிய F.A.S.T. முறை

பக்கவாதத்தின் அறிகுறிகளை மிக எளிதாக F.A.S.T. என்ற சூத்திரத்தின் மூலம் நினைவில் வைத்துக் கொள்ளலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தால் அடுத்த சில நிமிடங்களே மிக முக்கியமானவை.

F – Face (முகம்) – நோயாளியின் முகத்தில் ஒரு பக்கம் வழக்கத்திற்கு மாறாக கோணலாக அல்லது தொய்வாக இருக்கிறதா?

A – Arms  (கைகள்) – இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச் சொன்னால் ஒரு கை மட்டும் தானாகவே கீழே இறங்குகிறதா அல்லது பலவீனமாக இருக்கிறதா. உடலின் ஒரு பக்கம் பலவீனமாக அல்லது மரத்துப் போய் (Numbness) உள்ளதா?

S  – Speech (பேச்சு) – பேசும்போது சொற்கள் குழறுகிறதா? சொல்ல வரும் விடயம் மற்றவர்களுக்குப் புரியாமல் குழறுவது போன்று இருக்கிறதா?

T – Time (நேரம்) – மேற்கூறிய ஏதேனும் ஒரு அறிகுறி தென்பட்டாலும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நேரம் அது.

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

  1. இரத்த அடைப்பு (Ischemic Stroke) – மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களில் கொழுப்பு அல்லது இரத்த உறைவு காரணமாக அடைப்பு ஏற்படுதல். இதுவே 80%  பக்கவாதங்களுக்குக் காரணம்.
  2. இரத்தக் கசிவு (Haemorrhagic Stroke) – மூளையில் உள்ள பலவீனமான இரத்தக் குழாய் வெடித்து இரத்தக் கசிவு ஏற்படுதல்

யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்?

  1. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள். (High BP)
  2. நீரிழிவு நோய் மற்றம் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் (Diabetes).
  3. இரத்த்த்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் உள்ளவர்கள்.
  4. புகைப் பிடித்தல் மற்றம் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்.
  5. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ளவர்கள். (Atrial Fibrillation).

பக்கவாதம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

  1. உப்பைக் குறைத்து நார்ச்சத்து பொரட்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுங்கள்.
  2. தினமும் குறைந்தது 30 நிமிடங்களேனும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
  3. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைத் தொடர்ச்சியாகக் கண்காணியுங்கள்.

குறிப்பு – இங்கே குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மருத்தவரின் ஆலோசனைக்கு மாற்றானது அல்ல. எந்தவொரு நேரத்திலும் சுயமாக முடிவெடுக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானதாக இருக்கும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
© 2026 coconut point residences. Their nationwide fleet covers all states with power only or full loads, earning consistent praise for efficiency. heavy equipment transport westmoreland pa.