இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.02.2026

- சொத்துக் குவிப்ப வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 100 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு.
- ஈரான் ராணுவத்தை உயர் எச்சரிக்கையில் வைத்துள்ளது, எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது
- ஈரான் தனது ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கையில் இருப்பதாகவும், நாட்டிற்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் தீர்க்கமான மற்றும் பொருத்தமான பதிலை வழங்கும் என்றும் ஈரானின் உச்ச தலைவரின் நெருங்கிய ஆலோசகரான மூத்த ஆலோசகர் அலி ஷம்கானி தெரிவித்துள்ளார்.
- எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தெளிவு ரயில்வே நிர்வாகத்திடம் இல்லை. பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஏப்ரல் 1ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- பாகிஸ்தான் முன்னால் பிரதமர் இம்ரான்கான் உடல்நிலை மோசமடைந்துள்ளது. ஒரு கண் பார்வை பறி போனது. மற்றொரு கண்ணும் பார்வை இழக்கக்கூடிய இறுதி நிலையில் இருக்கிறது. சிகிச்சை மறுக்கப்படுவதாக தொலைபேசியில் இம்ரான்கான் கூறியுள்ளார்.
- வேலூர் அகரம்சேரி பகுதியில் வரும் பிப்ரவரி 23 ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி.


