இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.01.2026

- அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக் கூடாது. அப்படியே பதிவானால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்நதப்பட்ட அணைவர் மீதும் கிரிமினல் லழக்கு பாயும். – பதிவுத்துறை எச்சரிக்கை
- டிரம்ப் கிரீன்லாந்து தொடர்பான தனது நடவடிக்கைகளை தொடர்வாரானால் உலகின் அழிவு தொடங்குவதை டிரம்ப் காண்பார். – ரஷ்ய அதிபர்
- தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐகளில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு 10வது பிளஸ் 2 வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்றோடு அவகாசம் முடிவடைந்த நிலையில் அந்த அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- தவெக தலைவர் விஜயிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு. அடுத்தகட்ட விசாரணைகள் இனி ஏதுமில்லை என தகவல்
- சபரிமலையில் போலியான அபிஷேக நெய் பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்து ரூ.36.24 லட்சம் மோசடி. திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரில் 33 ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு
- ஜனநாயகன் தணிக்கை வழக்கு நாளை விசாரணை
- 2025ல் சீனாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவு. 1000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 ஆக குறைந்துள்ளது.


