இந்தியா
விஜய்க்கு இன்னொரு நெருக்கடியா? வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக விசாரணை

தவெக பொதுக்கூட்டம் மற்றம் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மூலம் பல நூறு கோடி நிதி பெற்று சட்டவிரோதமாக பயன்படுத்தியது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனால் இன்றைய சிபிஐ விசாரணையில் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடைபெறும்.
இன்றைய விசாரணைக்கு பிறகு இந்த விவகாரம் என்ஐஏவிடம் ஒப்படடைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜான் ஆரோக்கியசாமி கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்து வருகிறது.
ஏற்கனவே விஜய்க்கு வருமானவரி ஏய்ப்பு விசாரணை கரூர் சம்பவ விசாரணை மற்றும் ஜனநாயகன் பட தணிக்கை பிரச்னை என மூன்று பிரச்னைகள் பூதாகாரமாக இருந்து வரும் நிலையில் இப்போது நான்காவதாக வெளிநாட்டு நிதி மோசடி பிரச்னையும் சேர்ந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் மிகப் பெரிய பேசு பொருளாகி வருகிறது.








