இந்தியா
எடை குறைப்பு செய்ய வந்து விட்டது மாத்திரை…

எடை குறைப்புசெய்ய விரும்பும் ஆண்களும் பெண்களும் வாக்கிங் ஜாக்கிங் யோகா ஜிம் என எத்தனையோ செய்தாலும் அவர்கள் நினைத்தது போல் எடை குறைக்க முடியவில்லை என புலம்புபவர்கள் ஏராளம். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.
இப்போது எடை குறைப்புக்காகஉணவுடன் சாப்பிடும் மாத்திரைகளை உற்பத்தி செய்து அதன் ஆய்வ முடிவுகளுடன் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அலுவலகத்துக்கு சில மருந்து நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்தள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் உடல் பருமன் குறைப்பு அல்லது எடை குறைப்புக்கான ஊசி மருந்தை ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் எடை குறைப்பு மாத்திரைக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தள்ளது. இந்த நிறுவனத்தின் ஊசி மருந்தில் உள்ள அதே மூலக்கூறு 25 மில்லி கிராம் இந்த மாத்திரையில் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டால் 15 மாதங்களில் 13.6 சதவீத உடல் எடை குறையும். இந்த மாத்திரை உடலில் உள்ள ஆர்மோன்களை கட்டுப்படுத்தி பசி உணர்வை குறைத்து வயிறு நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
விரைவில் சந்தைக்கவர உள்ள இதனை வாங்க இப்பொதே தயாராகிவிட்டீர்களா……
