இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 21.02.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.260 உயர்ந்து கிராம் ரூ.14680க்கும் சவரன் ரூ.117440க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.290க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.290000க்கும் விற்பனை ஆகிறது.
- சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் பணமாக கட்டணம் பெறப்பட மாட்டாது. ,பாஸ்டேக் மற்றும் யுபிஐ மட்டுமே அனுமதிக்கப்படும்.
- பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது. பெண்களுக்கு எலும்புகள் உடையாமல் வெளிப்புற காயம் இல்லாதவரை அது குடும்ப வன்முறையாகாது. ஆண்களுக்கு எதிராக ஆதாரத்துடன் புகாரளித்தால் கூட 15 நாள் மட்டுமே சிறைவாசம் என ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
- இந்திய ராணுவத்தின் அக்னிவீர் பணிக்கு சென்னை, திருவள்ளுர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1 கடைசி நாள். ஜீன் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
- அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்தியா மீதான இறக்குமதி வரி 18 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைந்தது. அமெரிக்க வர்த்தக விரிவாக்க சட்டப்படி டிரம்ப் இன்று புதிதாக விதித்த 10 சதவீதம் வரி மட்டுமே இந்தியா ஜப்பான்நாடுகளுக்கு பொருந்தும்.என வெள்ளை மாளிகை தகவல்.
- இன்று பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது.


