இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 20.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.160 உயர்ந்து கிராம் ரூ.13610க்கும் சவரன் ரூ.108880க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.12 உயர்ந்து கிராம் ரூ.330க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.330000க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு.
- அரசு அளித்த உரையை வாசிக்காமல் அரசை விமர்சித்து தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது – முதல்வர்
- அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்து தமிழ்நாடு தொடுத்த மனுவில் அமலாக்கத் துறையும் ஒன்றிய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
- ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை என்ற மரபை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியா முழுதும் இந்த நடவடிக்கையை அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – முதல்வர்
- பொதுமக்கள் எளிதில் பார்க்க வசதியாக எப்.ஐ.ஆர். பதிவுகளை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். – இதில் பலாத்கார வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர் விவரங்கள் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி ஆன்லைனில் வெளியிடப்படமாட்டாது. – உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி
- உலகளவில் மொபைல் பயன்பாட்டில் 14.1 கோடி தினசரி பயனர்களைக் கொண்டு எக்ஸ் செயலியை முந்தியது திரெட்ஸ் செயலி.


