ஆட்டோமொபைல்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் – சிறப்பு வசதிகள் என்னென்ன?

இந்தியாவில் தற்போது 150க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஜனவரி 17ம் தேதி இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த இரயிலில் உள்ள சிறப்பம்சங்கள் வசதிகள் கட்டண விவரம் ஆகியவறைப்பற்றி விரிவாக காண்போம்.
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தில் அவுரா (கொல்கத்தா) மற்றும் காமாக்யா (கௌகாத்தி) ரயில் நிலையங்களுக்கு இடையே 956 கி.மீ. தூரத்திற்கு பயணங்களை மேற்கொள்கிறது. இந்த தூரத்தை இந்த ரயில் வெறும் 14 மணி நேரத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் கடக்கிறது. வழக்கமான பயண நேரத்தை விட இரண்டரை மணி நேரம் குறையும்.
முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் 11 மூன்றாம் வகுப்பு பெட்டிகள் 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஒரு முதல் வகுப்பு பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். விபத்துக்களை கட்டுப்படுத்தும் “கவாச்“ பாதுகாப்பு அமைப்பும் அவசர கால தொடர்பு அமைப்புக்களும் உள்ளன. மொத்தம் 400 கி.மீ.வரையிலான பயணத்துக்கு மூன்றாம் வகுப்பு கட்டணம் 960 ரூபாய். இரண்டாம் வகுப்பு கட்டணம் 1240 ருபாய். முதல் வகுப்பு கட்டணம் 1520 ருபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாம் வகுப்பிற்கு கிலோமீட்டருக்கு ரூ.2.4 ஆகவும் இரண்டாம் வகுப்பிற்கு ரூ.3.1 ஆகவும் முதல் வகுப்பிற்கு ரூ.3.8 ஆகவும் இருக்கும். 1000 கி்மீ் தூர பயணங்களுக்கு ரூ.2300 முதல் 3600 வரை கட்டணம் வசூலிக்கப்படும். மொத்த பயணக் கட்டணம் உணவுக்கட்டணமும் சேர்ந்து இருக்கும் போது கூடுதலாக 5 சதவீதம் ஜி.எஸ்.டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
இரு நகரங்களுக்கு இடையிலான விமான பயணக் கட்டணம் ரூ.6000 முதல் 8000 ரூபாயாக இருக்கும் நிலையில் அதைவிட குறைவான கட்டணத்திலேயே இந்த ரயிலில் பயணம் செய்யலாம்.
இந்த ரயிலில் 823 பயணிகள் படுத்துக் கொண்டு பயணம் செய்யலாம். மூன்றாம் வகுப்பு பெட்டியில் 611 பேரும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் 188 பேரும் முதல் வகுப்பு பெட்டியில் 24 பேரும் பயணம் செய்யும் வகையில் இந்த அரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் 75 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் யாதவ் தெரிவித்தார்.
இந்த ரயிலில் பயோ டாய்ஸலட் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இலவச வை-பை வசதி மற்றும் ஜிபிஎஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மொபைல் போன் சார்ஜிங் வசதியும் உண்டு. குளிக்க வெந்நீர் ஷவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயக்கப்படும். ஒரு வழியில் வியாழக்கிழமையும் ஒரு வழியில் புதன் கிழமையும் இந்த ரயில் இயங்காது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் வி.ஐ.பி. எனப்படும் மிக முக்கிய பிரமுகர்கள் மூத்த மற்றும் உயர் ரயில்வே அதிகாரிகள் ரயில் பாஸ்களை பயன்படுத்தி பயணிக்க முடியாது.
ஆர்.ஏ.சி. எனப்படும் பகுதியளவு உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை வசதி திட்டம் இந்த ரயிலில் கிடையாது. என்பதால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணியர் மட்டுமே அந்த ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
குறைவான லக்கேஜ்…. நிறைவான பயணம்…










