சினிமா செய்திகள்
யோகிபாபு, யாஷிகா நடிக்கும் ஜாம்பி பட போஸ்டர் ரிலீஸ்!

காமெடியனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக புரமோட் ஆகி வருகிறார் யோகி பாபு. கடந்த ஆண்டு சிறந்த காமெடியன் விருதினை பல விருது மேடைகளில் வென்றும் வெல்லப்போகவும் உள்ளார் யோகிபாபு.
தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் வரும் பொங்கலுக்கு ரசிகர்களை சிரிக்க வைக்க வரும் யோகி பாபு, கூர்கா, தர்மபிரபு படங்களை தொடர்ந்து ஜாம்பி எனும் காமெடி பேய் படத்திலும் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மேலும், யூடியூப் சேனல் பிரபலங்களான கோபி, சுதாகர், அன்பு, பிஜிலி ராமேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை புவனா மிலன் இயக்குகிறார். இசை காட்டேரி பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



















