தமிழ்நாடு
மாஸ்க்கை கழட்டுங்க, உங்க முகத்தை பார்க்கனும்: முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த பெண்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ’வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணபள்ளி என்ற பகுதிக்கு சென்றார் என்பதும் அந்த திட்டத்தை அவர் வெற்றிகரமாக தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வீடு தேடி வரும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த பின் அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பெண் ஒருவர் திடீரென ஸ்டாலின் அவர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, எனவே உங்கள் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும், அதனால் மாஸ்க்கை கழட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த பெண்ணின் வேண்டுகோளுக்காக முதல்வர் ஸ்டாலின் மாஸ்க்கை கலக்கினார்.
உடனடியாக அந்தப் பெண் நன்றி கூறியதோடு, விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயரே ஸ்டாலின்தான் என்று கூறி அவரை வாழ்த்தினார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






















