தமிழ்நாடு
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கிடைக்கும்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர். அதில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டது. இதனால் யாருக்கெல்லாம் இந்த தொகை கிடைக்கும் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கியுள்ளார்.

#image_title
இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், மகளிர் உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றார். மேலும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் இந்த திட்டம் யாருக்கு பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரியும் என்றார்.
மீனவப்பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்கள். கட்டுமானப்பணியிலுள்ள பெண்கள், சிறு கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் குறைவான ஊதியத்தில் வேலை செய்யும் பெண்கள். ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணி செய்யும் பெண்கள் என ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.