தமிழ்நாடு
அதிமுகவில் 1 லட்சம் துரோகிகள்: எடப்பாடியை விளாசிய தினகரன்!

அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.

#image_title
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் பலமுறை கூறிவிட்டேன். பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயலாபத்தால் அம்மாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது. அதனை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் அதிமுக ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்து கொள்கின்றனர் என டிடிவி.தினகரன் விமர்சித்தார்.