கிரிக்கெட்
வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் விராட் கோலி – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேபடனாக இருப்பவர் விராட் கோலி. இவர் எது செய்தாலும் அது வைரல்தான். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை. இங்கிலாந்து ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்பட்ட் 3 வீரர்கள் உட்ப்ட மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு செல்லும் முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது ஜூலை 7ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் கோவிட்-19 தடுப்புசியின் 2ம் தவனை செலுத்தப்படவுள்ளது. ஏனெனில் இங்கிலாந்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற வியாழக்கிழமை துவங்கும் ஒரு நாள் தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. எனவே, அந்த அணி வீரர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே, புதிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.எனவே, கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். அவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவரது அணியை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
















