சினிமா செய்திகள்
அடேங்கப்பா.. நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் இருவருக்கும் அண்மையில் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிக விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்துக்கு குடும்பத்தினர், ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, போனி கபூர் உள்ளிட்ட முக்கிய நண்பர்களுக்கு மட்டுமே இருவரும் அழைப்பு விடுத்து இருந்தனர்.
மேலும் இருவரும் திருமணத்தை முடித்த கையோடு தாய்லாந்துக்குத் தேன் நிலவுக்கும் சென்றனர். இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இந்தியா.காம் தளம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு 215 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அதில் நயன்தாராவின் சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய். விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய்.
நயன்தாரா சொத்து மதிப்பு
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரவுக்கு 265 கோடி ரூபாய் சொத்து உள்ளது. ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளமாகப் பெறுகிறார்.
விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் நயன்தாராவுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது. தனிஷ்க், டாடா ஸ்கை, கே பியூட்டி, உஜாலா என பல விளம்பரங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.
சென்னையில் போயஸ் கார்டனில் ஒரு வீடு, எழும்பூரில் 4 படுக்கை அறை கொண்ட ஆடம்பர பிளாட், ஹைதராபாத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு விடு, கேரளாவில் ஒரு வீடு என நயன்தாராவின் அசையா சொத்துக்கள் மதிப்பு மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது.
வணிகம்
மேலும் நயன்தாரா சொந்தமாக ஒரு காஸ்மெடிக் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் கீழ் பல்வேறு பிரபல பிராண்டுகளின் லிப்ஸ்டிக், அழுக சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார். நயன்தாரா, வினேஷ் ஷிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
விக்னேஷ் ஷிவன்
50 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட விக்னேஷ் ஷிவன், ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார். முக்கிய நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதவும் 1 முதல் 3 கோடி ரூபாய் வரை விக்னேஷ் ஷிவனுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஃபோட்ப்ஸ் திரைப் பிரபலஙகள் பட்டியலில் இவரது சொத்து மதிப்பு 44 மில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்த விமானம்
நயன்தாரா அண்மையில் சொந்தமாக பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அதில்தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அடிக்கடி பயணம் செய்து வருகிறார்கள்.