சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி, பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி படக்குழவினர், மாஸ்டர் படத்தின் டீசர் வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். மாஸ்டர் படம் தமழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, மாஸ்டர் ரிலீஸாகும் நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த நடவடிக்கை சர்ச்சையானதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தமிழக அரசின் நடவடிக்கைக்கு முடக்குப்போட்டது. என்னவானாலும் மாஸ்டர் ரிலீஸ் உறுதியாகியுள்ளதால், தளபதி ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.
தமிழில் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி ரெய்டு’ பாட்டு ஹிட்டான நிலையில், தெலுங்குவில் இந்தப் பாடல் ‘மாஸ்டர் ரெய்டு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலின் லிரிக் வீடியோவைத் தற்போது மாஸ்டர் படக் குழவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியும் வைரலாகி வருகிறது.