சினிமா செய்திகள்
விஜய்சேதுபதியின் ‘லாபம்’ அசத்தலான டிரைலர் ரிலீஸ்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லாபம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் திரையரங்குகள் திறப்பதற்காக இந்த படம் காத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 9ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே ‘லாபம்’ படத்தின் முதல் டிரைலர் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் சற்று முன் இந்த படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பல சீரியஸான காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பாக விவசாய நிலத்தை அழித்து விட்டு எட்டு வழி சாலையையும், நான்கு வழி சாலையையும், போடும் அரசின் உள்நோக்கங்களை வெளிப்படுத்தும் காட்சிகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உண்மையில் ‘லாபம்’ என்றால் என்ன? உள்கட்டமைப்பு என்றால் என்ன? என்பதற்கு தனது ஆணித்தரமான வசனம் மூலம் எஸ்பி ஜனநாதன் இந்த படத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதை விஜய் சேதுபதியின் ஆவேசமான குரலில் கேட்கும்போது இன்னும் அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதல்முறையாக நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஜய் சேதுபதியின் வெற்றிப்பட பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.