சினிமா செய்திகள்
திடீரென டெல்லி கிளம்பி சென்ற தளபதி விஜய்: வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் இன்று திடீரென டெல்லி கிளம்பி சென்றுள்ள நிலையில் அவர் விமானத்தில் ஏறி இருக்கையில் உட்காரும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு பக்கம் அரசியல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய் தான் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தான் இன்று காலை விஜய் டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். விமானத்தில் ரசிகர்கள் சிலர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒரு வாரம் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த ஸ்டண்ட் காட்சியை அன்பரிவ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த பிரமாண்டமான திரைப்படத்தில் தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.


















