சினிமா செய்திகள்
சி.எஸ்.கே சிங்கங்களா! சிம்புவின் கொரோனா குமார் பாடல் ரிலீஸ்!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்று துபாயில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் சிம்பு நடிக்க இருக்கும் ’கொரோனா குமார்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’சிஎஸ்கே சிங்கங்களா’ என்ற திரைப்பட பாடல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’சிஎஸ்கே சிங்கங்களா, சிஎஸ்கே செல்லங்களா’ என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ளனர். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியின் வீரர்கள் மற்றும் வெற்றியை குறிக்கும் வகையில் பாடல் வரிகளை லலித் ஆனந்த் என்பவர் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு ஜாவித் ரியாஸ் என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரோனா குமார்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.