தமிழ்நாடு
உதயநிதியின் வரிவிலக்கு வழக்கு: கண்டனம் தெரிவித்து முடித்து வைத்த நீதிமன்றம்.

தமிழில் டைட்டில் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்கு உண்டு என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விதி இருந்த நிலையில் பல திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கிடைத்தது. ஆனால் உதயநிதி நடித்த ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’இது கதிர்வேலன் காதல், ’நீர்பறவை’ ’மனிதன்’ உள்ளிட்ட படங்களுக்கு மட்டும் வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உதயநிதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் கூறியபோது, ‘உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வரிவிலக்கு தருவவதில் பாகுபாடு காட்டியது உறுதியாகி உள்ளது என்றும் குழுவை அமைக்கும் போது உரிய தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது
மேலும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் குழு அமைப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் ஊழலுக்கு இடம் தராத வகையில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த 2012 – 2013ஆம் ஆண்டுகளில் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி இவ்வாறு கூறி முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதியின் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’நீர்பறவை’ ’வணக்கம் சென்னை’ ’இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களுக்கு வரிவிலக்கு தராதது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற வழக்கில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு தர அமைக்கப்பட்ட குழு பாகுபாடு காட்டியதாக நீதிமன்றம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுளளது.









