தமிழ்நாடு
விஜயகாந்தை சந்தித்து ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் திமுக தலைவரின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
விஜயகாந்த் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும் அரசியலில் அவருக்கு என்ன நடக்கின்றது என்றே சில வருடங்களாக தெரியவில்லை என்றும் ஒரு சில முறை உதயநிதி அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து விஜயகாந்த் அவர்களிடம் ஆசி பெற அவரை நேரில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மாற்று கட்சியாக இருந்தாலும் மூத்த அரசியல்வாதிக்க்கு மதிப்பு கொடுக்கும் இளம்தலைவராக உதயநிதி ஸ்டாலின் விளங்கி வருகிறார் என்று அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
















