சினிமா செய்திகள்
உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கதையா? டீசர் ரிலீஸ்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டீஸரில் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் காட்சிகள் உள்ளன என்பதும் இந்த சம்பவங்கள் அனைத்தும் பொள்ளாச்சியில் நடைபெறுவது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் கதை பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்த கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை தரும் என்றும் கூறப்படுகிறது. திபு நிபுணன் தாமஸ் இசையமைப்பில் பின்னணி இசை அபாரமாக உள்ளது. மொத்தத்தில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.