உலகம்
அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

ஐக்கிய அரபு அமீரகம் தலைநகரான அபுதாபியில் நேற்று திடீரென தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டாங்கிகள் சேதமடைந்தன என்பதும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் மீட்பு பணிகளுக்கு பின்னர் இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகி இருப்பதாக வெளிவந்த செய்தியும் அதில் இருவர் இந்தியர்கள் என்ற செய்தியும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த தாக்குதலுக்கு ஹ்வுத்தி என்ற ஈரானின் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அபுதாபி மீட்பு படையினர் சுறுசுறுப்பாக மீட்பு பணியை செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பல்களை ஹைத்தி கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு அபுதாபியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கப்பல் மற்றும் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இருவர் இந்தியர் என்றும் ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அபுதாபி தாக்குதலில் பலியான 2 இந்தியர்களுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























