இந்தியா
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்… எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

#image_title
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகளும், வீடியோக்களும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்த நிலையில் தற்போது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக பிரஷாந்த் கிஷோர் அவை உண்மையான சம்பவங்கள் தான் என கொளுத்தி போட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரஷாந்த் கிஷோர், தமிழ்நட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையானவை, இவற்றை புறக்கணிக்க கூடாது. போலி வீடியோக்கள் என்று பீகார் துணை முதல்வர் கூறுகிறார் ஆனால் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன் என்றார்.
மேலும், சிலர் போலி வீடியோக்களை பகிர்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள பிரசாந்த் கிஷோர் நடந்த சம்பவங்களின் உண்மைகளில் இருந்து யாரும் விலகி செல்லக் கூடாது. இந்த விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் முழுப்பொறுப்பையும் அதிகாரிகளிடம் விட்டுவிட்டார், தமிழ்நாடு முதல்வருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சொந்த மாநில மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கொண்டாடியுள்ளார் என விமர்சித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இவரது இந்த கருத்து தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.