Connect with us

தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 2 ஆண்களை திருமணம் செய்த பெண்: ஒருவர் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு!

Published

on

ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை திருமணம் செய்த பெண் ஒருவரின் இரண்டு கணவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம் அருகே உள்ள குமரகிரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரியராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரியராகவன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது டிவியுடன் வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பழுதுபார்க்க கொடுத்துவிட்டு காத்திருந்தார். அப்போது திடீரென சூரிய ராகவன் மீது மிளகாய் பொடியை எடுத்து வீசி நிலைகுலைய வைத்து அந்த இளைஞனை தான் எடுத்து வந்த கறி வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் சூரியராகவன் தலை துண்டிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் சடலத்தை எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் விளாத்திகுளம் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்,
விசாரணையில் சூரியராகவனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது விளாத்திகுளம் அடுத்த சோழபுரத்தை சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. நான்கு மணி நேரத்தில் திருச்செந்தூரில் வைத்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் காதல் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது,

ஆனந்தராஜ் படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான மகாலட்சுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் வேலைக்காக ஆனந்தராஜ் துபாய் சென்று உள்ளார் இந்த இடைவெளியில் படுகொலை செய்யப்பட்ட சூரியராகவன் உடன் மகாலட்சுமிக்கு இரண்டாவதாக காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே காதலியை பிரிய மனமில்லாத ஆனந்தராஜ் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி மகாலட்சுமியை திருச்செந்தூர் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சூரியராகவன் உடனான காதல் விவகாரம் மகாலட்சுமி வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதை காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சூரியராகவன் – மகாலட்சுமி இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தன்னை அலைபாயுதே ஸ்டைலில் ரகசிய திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு சாதியை சேர்ந்தவரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், சூரியராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். தங்கள் வீட்டில் டிவி பழுதாகி இருப்பதாக கூறி டிவியை தூக்கி கொண்டு அவரது கடைக்கு சென்ற ஆனந்தராஜ், சூரியராகவன் சென்று கவனத்தை திசை திருப்பி அவரது தலையை துண்டித்து கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் துண்டித்த பிறகு தலையை கையில் வைத்து தூக்கி போட்டு விளையாடி ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து இருவரையும் திருமணம் செய்த மகாலட்சுமி, ஒரு கணவர் சிறையிலும் இன்னொரு கணவர் உயிரோடு இல்லாததையும் அறிந்து கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா39 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. 5 street #2 san francisco. Link.