இந்தியா
விதி என்பது இதுதானா? நண்பரை கொலை செய்து உடலை தூக்கி எறிந்தபோது நடந்த விபரீதம்..!

நண்பரை கொலை செய்து அவரது உடலை மலை உச்சியில் இருந்து தூக்கி எறிய முயன்ற போது ஏற்பட்ட விபரீதம் குறித்த நிகழ்ச்சி இணையதளங்களில் வைரலாகி விதி என்பது இதுதானா? என்று பேச வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலி காட் என்ற பகுதி சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்படும் சுற்றுலாதலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் 30 வயது இளைஞர் ஒருவரை அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்ததாக தெரிகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொலை செய்த நண்பரின் சடலத்தை அம்போகோட் பகுதியில் மலை உச்சியில் இருந்து தூக்கி எறிய நண்பர்கள் மூவரும் முடிவு செய்தனர். அந்த பகுதிக்கு கார் மூலம் உடலை எடுத்துச் சென்ற நண்பர்கள் மலை உச்சி பகுதிக்கு வந்த பிறகு காரில் இருந்து இறங்கி உடலை காரில் இருந்து இறக்கி மலை உச்சியில் இருந்து தூக்கி எறிந்தனர்.
அப்போது திடீரென மூன்று பேர்களில் ஒருவர் பேலன்ஸ் தவறி உடல் உடனே சேர்த்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் உடனடியாக அந்த நபரின் குடும்பத்தினரும் போய் தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் இடத்திற்கு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவத்திற்கு வந்தனர். நீண்ட தேடலுக்கு பிறகு நண்பர்கள் தூக்கி எறிந்தவரின் உடல் மற்றும் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தவரின் உடல் என இருவரது உடலையும் கண்டுபிடித்தனர். இருவரது உடல்களும் கிட்டத்தட்ட அருகருகே இருந்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் உடலை தூக்கி எறிந்து விட்டு உயிரோடு இருக்கும் இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்களை கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கி எறிந்த போது அவர்களில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் விதி மிகவும் வலியது என்பதை நிரூபித்துள்ளது என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த பகுதியில் ஏற்கனவே பலர் இறந்த உடலை தூக்கி எறிந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அந்த பகுதி முழுவதும் சிசிடிவிவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.