தமிழ்நாடு
லண்டனில் சொத்து இருந்தால், நானே அரசுடமையாக வழங்குவேன்: எடப்பாடிக்கு டிடிவி தினகரன் அதிரடி பதிலடி!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருக்கிறது, அதனை அரசுடமையாக்கனும் என கூறியிருந்தார். இதற்கு டிடிவி தினகரன் அதிரடி பதில் ஒன்றை அளித்துள்ளார்.

#image_title
செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, முதலில் டிடிவி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார். அவருக்கு சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடமையாக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பழனிச்சாமி ஏன் இப்படி பதற்றத்துல உளறுராருனு தெரில. பதற்றத்துல எனக்கு லண்டன்ல ஹோட்டல் இருக்குனு உளறுராரு. பழனிச்சாமி கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த ஊழல் முறைகேடுகளால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். அவர் பயத்துல டிடிவி தினகரன் பக்கம் திசை திருப்புகிறார்.
உண்மையாகவே அவர் சொல்வது போல எனக்கு லண்டனில் ஹோட்டல் இருந்தால் நானே அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதனை அரசுடமையாக்குவேன். அப்படி எனக்கு எதுவுமில்லை. பற்றத்துல அண்ணன் பழனிச்சாமி மடியில் கணமுள்ளதால் பிதற்றுகிறார் என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.