தமிழ்நாடு
அதிமுகவின் ஊழல் பட்டியலை அண்ணாமலையிடம் கேளுங்கள்: டிடிவி தினகரன் பதிலடி!

சென்னை பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுகவினரின் ஊழல் பட்டியலை அண்ணாமலையிடம் கேளுங்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

#image_title
இன்று காலை திமுகவின் சொத்து பட்டியல், ஊழல் பட்டியல்களை வெளியிட்ட அண்ணாமலை, அடுத்தடுத்து வெவ்வேறு கட்சிகளின் சொத்து பட்டியில் வெளியிடப்படும் என்றார். மேலும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியினரின் ஊழல் பட்டியல்கள் வெளியிடப்படும் என்றார்.
இந்நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாமலை இன்று வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்து இந்த பட்டியல் உண்மையா? இல்லையா? என அமைச்சர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். மேலும் அதிமுக பட்டியல் தொடர்பான கேள்விக்கு, அதை அண்ணாமலையிடம் கேளுங்கள் என்றார் டிடிவி தினகரன்.