தமிழ்நாடு
காமெடி பீஸ் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஓய்வு கொடுங்கள்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே பிரச்சாரத்திற்கான காலம் இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் அதிமுக திமுகவுக்கு இணையாக புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியும் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில் தேமுதிக உள்பட ஒருசில கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலம் முழுவதும் டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவர் வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் அதிமுகவிற்கு பாதிப்பு என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிய டிடிவி தினகரன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 100 கோடி ரூபாய் செலவழிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டமிட்டுள்ளதாகவும், மாற்றி மாற்றி பேசும் அவர் காமெடி பீஸ் ஆகிவிட்டார் என்றும் எனவே அவருக்கு மக்கள் ஓய்வு கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அது உங்களுடைய பணம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மணப்பாறை அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரிடம் ஜேசிபி ஆபரேட்டர் ஆக இருந்து வரும் அழகர்சாமி என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மணப்பாறை தொகுதிகளை அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது














