சினிமா
நடுரோட்டில் சீரியல் நடிகையை அலற விட்ட TTF வாசன்; என்ன ஆச்சு தெரியுமா?

பிக் பாஸ் புகழ் ஜிபி முத்துவை முன்னதாக பைக்கில் ஏற்றிக் கொண்டு விருட்டென்று சென்று அவரை அலற விட்டு சர்ச்சையில் சிக்கிய TTF வாசன் தற்போது மெளன ராகம் சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை ரவீணாவை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
தாறுமாறாக பைக் ரேஸ் ஓட்டி வரும் டிடிஎஃப் வாசன் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் போலீஸில் புகார்கள் குவிந்து வருகின்றன.

#image_title
ஆனாலும், அடிக்கடி போலீஸுக்கே சவால் விடும் அளவுக்கு வீடியோக்களை போட்டு அதற்கு தகுந்தாற்போல வாங்கிக் கட்டிக் கொண்டும் வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் டிடிஎஃப் வாசனை வரவழைத்து வச்சு செய்த சம்பவம் மிகப்பெரிய அளவில் ட்ரோல் மெட்டீரியல் ஆனது.
இந்நிலையில், தனது ரசிகர்களை மீண்டும் கவரும் வகையில் சின்னத்திரை நடிகை ரவீணாவை அழைத்துக் கொண்டு தனது பைக்கில் வேகம் காட்டி இருக்கிறார் டிடிஎஃப் வாசன்.

#image_title
அவரது பைக்கில் ஏறியதில் இருந்தே உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்வது போல மெளனராகம் ரவீணா அலறியடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில், சம்பவம் என்னவென்றால் வேகமாக பைக் ஓட்டி செல்லும் போது போலீஸாரிடமே அவர்கள் சிக்கி விட்டனர். 300 கி.மீ., வேகத்தில் பைக்கில் போனீங்களா என போலீஸார் விசாரிக்க, அய்யோ அவ்ளோ ஸ்பீட்லலாம் போகல சார் என கெஞ்சிக் கூத்தாடியிருக்கிறார் டிடிஎஃப் வாசன்.




