சினிமா செய்திகள்
Thunivu OTT Release: ஒடிடியில் ரிலீஸான துணிவு..!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் – நடிகர் அஜித் ஆகியோர் மூன்றாவது முறை கூட்டணியில் உருவான படம் “துணிவு. வாரிசுக்கு போட்டியாக பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11 வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. மங்காத்தாவுக்கு பிறகு அஜித் க்ரே கதாபாத்திரமாக நடிக்கும் இப்படம், கிரெடிட் கார்டு, வங்கி மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பான மோசடிகளை வெளிக்கொணரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
If there’s one thing we know for sure, it’s to never mess with this gangsta! 🤯💥
Thunivu is now streaming on Netflix in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! 🔥 #ThunivuOnNetflix pic.twitter.com/LECIzn8EVb— Netflix India South (@Netflix_INSouth) February 9, 2023
திரையரங்குகளில் படத்தை தவறவிட்டவர்களுக்காக இப்படம் ஒடிடில் தற்போது வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் புதன்கிழமை நெட்ஃபிக்ஸ் இல் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃபிக்ஸ் சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்புடன் வெளியிட்டது.
துணிவு இதுவரை உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.