சினிமா
சீரியல் வாய்ப்புக்காக அசீமுக்கு ஜால்ரா தட்டும் தனலட்சுமி; குறும்படம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

விக்ரமன் மூலமாக தனலட்சுமிக்கு எந்தவொரு பயனும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட தனலட்சுமி அசீமுக்கு மீடியாவில் இருக்கும் பெரும் பலத்தை பார்த்து அப்படியே அவர் பக்கம் சாய்ந்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில், தனியார் யூடியூப் சேனல் நடத்திய ஃபேன்ஸ் மீட் ஷோவில் பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் அசீம் கலந்து கொண்டார். அவருடன் அவரது திடீர் தங்கச்சி தனலட்சுமியும் பங்கேற்றார்.

#image_title
நிகழ்ச்சியில் அசீமை கட்டிப் பிடிப்பது, பிரியாணி ஊட்டுவது என ஏகப்பட்ட கண்கொள்ளா காட்சிகள் அரங்கேறின. அப்போது அப்யூசர் அசீம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? என்றும் என் சட்டையை பிடித்து அசீம் இழுத்த நிலையில், அசீமுக்கு ஆதரவாக விக்ரமன் ஏன் அவருடன் சகஜமாக பேசினார் என ஏகப்பட்ட கேள்விகளை தனலட்சுமி அடுக்கினார்.

#image_title
இதே தனலட்சுமி தான் பொம்மை டாஸ்க்கில் அவன் என்ன எங்கே கைய வச்சி தள்ளினான் தெரியுமான்னு அன்னைக்கு பிக் பாஸ் வீட்டில் அழுது புலம்பினார் என அந்த குறும்படங்களை எடுத்துப் போட்டு தனலட்சுமியின் இரட்டை வேடத்தை பிக் பாஸ் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

#image_title
இவங்களோட ஆட்டம் எல்லாம் பிக் பாஸ் கொண்டாட்டம் வரைக்கும் தான் என்றும், அடுத்து இவங்களும் முந்தைய சீசன் போட்டியாளர்கள் போல ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள். அடுத்த சீசன் போட்டியாளர்களை ரசிகர்களும் கழுவி ஊற்ற ஆரம்பிப்பார்கள் என நெட்டிசன்கள் ரியாலிட்டியை பேசி வருகின்றனர்.









