இந்தியா
இந்தியா-நேபாளம் இடையே பயணிகள் ரயில்: இருநாட்டு பிரதமர் தொடங்கி வைத்தனர்!

இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைத்தனர்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயநகர் என்ற பகுதியிலிருந்து நேபாளத்தில் உள்ள குர்தா என்ற பகுதிக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இன்று இந்திய பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் ஷேர்பகதூர் தியுபாவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ரயில் இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே மின்சார பாதை அமைக்கப்பட்ட துணைமின் நிலையமும் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் நேபாள பிரதமரும், இருநாட்டு குழுவினரும் பல்துறை குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன