இந்தியா
உலகின் மோசமான டிராஃபிக் கொண்ட 5 நகரங்கள் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்!

2019-ம் ஆண்டில் உலகின் மோசமான டிராஃபிக் கொண்ட நகரங்கள் பட்டியலை நெதர்லாந்தை சேர்ந்த டாம் டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்தியாவின் சிலிகான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் டாப் 5 மோசமான டிராஃபிக் நகரங்கள் பட்டியலில் மும்பை 4வது இடத்தையும், புனே 5வது இடத்தையும் பிடித்துள்ளன.
பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது, 2019-ம் ஆண்டு பெங்களுருவில் வசிக்கும் மக்கள், 243 மணி நேரம் கூடுதலாக ட்டிராஃபிக்கில் சிக்கி தவித்துள்ளார்கள்.















