இந்தியா
ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்குத் தடையா? உண்மை என்ன?

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும் தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids)500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
சாதாரண தண்ணீரில் சுண்ணாம்பு, மெக்னீஷியம், பாஸ்பேட், இரும்பு, பைகார்பனேட் போன்ற பல்வேறு தாது சத்துக்கள் கரைந்து இருக்கும். இந்த தாதுகளின் கலப்படம் தண்ணீரில் 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கக் கூடாது. இவ்வாறு குறைவாக இருந்தால், அந்த தண்ணீரைக் குடிப்பவர்களின் உடல் எழும்பு உறுதித் தன்மை இழத்தல் போன்ற உடல்நல பிரிச்னைகள் ஏற்படும். எனவே இந்த அளவுக்குத் தண்ணீரைச் சுத்திகரிப்பு செய்யும் ஆர்ஓ இயந்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முதலில் இந்த உத்தரவைச் செயல்படுத்த, கருத்துக் கணிப்பு போன்றவை நடத்த வேண்டும். எனவே 4 மாதங்கள் வரை கால அவகாசம் கேட்டது. ஆனால் தற்போது 2 மாதங்களுக்குள் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மறுபக்கம் ஆர்ஓ சுத்திகரிப்பு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடின. ஆனால் முதலில் இது குறித்து மத்திய அமைச்சகத்திடம் அணுகுமாறு உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
எனவே ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசு எந்த ஆர்ஓ இயந்திரங்களுக்குத் தடை என அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.














