இந்தியா
கேரளாவை தாக்கிய கொரொனா வைரஸ்!

சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார்.
அந்த மாணவரின் உடலில் கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அந்த மாணவருக்கு கொரொனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தாலும் உடல் நிலை சீராகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த மாணவரை மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த தகவலை இந்தியச் சுகாதார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.














