Connect with us

செய்திகள்

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு: இன்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணங்கள் அமலில்!

Published

on

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5% முதல் 10% வரை சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 1) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், இந்த சுங்கக் கட்டண உயர்வால் கூடுதல் சுமையைச் சந்திக்க வேண்டியுள்ளது. அன்றாட பயணிகள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், தொழில் துறையினரிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு உயர்ந்துள்ளது?

  • கார், வேன், ஜீப் : ஒருமுறை மற்றும் இருமுறை பயணத்திற்கு தலா ரூ.5 உயர்வு, மாதாந்திர பாஸ் ரூ.65 உயர்வு.

  • இலகுரக வர்த்தக வாகனங்கள் : ஒருமுறை கட்டணத்தில் மாற்றமில்லை, இருமுறை பயணத்திற்கு ரூ.5 உயர்வு, மாதாந்திர பாஸ் ரூ.105 உயர்வு.

  • கனரக வாகனங்கள் : ஒருமுறை பயணத்திற்கு ரூ.5, இருமுறை பயணத்திற்கு ரூ.10, மாதாந்திர பாஸ் ரூ.215 உயர்வு.

  • மிக கனரக வாகனங்கள் : ஒருமுறை பயணத்திற்கு ரூ.5, இருமுறை பயணத்திற்கு ரூ.20, மாதாந்திர பாஸ் ரூ.345 உயர்வு.

FASTag இல்லாத வாகனங்களுக்கு இரட்டை கட்டணம்
இந்த புதிய கட்டண உயர்வு FASTag கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். FASTag இல்லாதவோ அல்லது இருப்பு போதாமையோ இருந்தால், வாகன ஓட்டுநர்கள் இரட்டை கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.

சுங்கக் கட்டண உயர்வின் காரணமாக போக்குவரத்து செலவுகள் உயரும் நிலையில், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் மாதாந்திர செலவில் கூடுதல் சுமை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..