இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 27.02.2026

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எந்த குற்றமும் செய்யாத முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா 530 நாட்களும் முன்னால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்156 நாட்களும் சிறை தண்டனை அனுபவித்தனர். சிபிஐயின் ஜோடித்த வழக்கு இது எனக்கூறி நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட 23பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தி அவர்களை விடுதலை செய்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியரை முதல் குற்றவாளியாக மாற்றிய சிபிஐ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். டெல்லி சிறப்பு நீதிமன்றம். நீதிமன்ற வாசலில் கெஜ்ரிவால் ஆனந்தக் கண்ணீர் மல்க பேட்டி.
ரூ.350க்கு அன்லிமிடெட் ரீசார்ஜ் கிடைக்கும் போது ஒரு எம்எல்ஏக்கு எதற்கு ரூ.9000 தொலைபேசி அலவன்ஸ்? – நாடாளுமன்றத்தில் கேள்வி.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
நடிகர் விஜயோட தவெக கட்சி இப்போது தேர்தலில் நின்றாலும் 26 சதவீதம் ஓட்டு இருக்குன்னு ஆதவ் அர்ஜீனா சொல்றாரு… ஆனா நான் சவால் விடறேன். விஜய் மட்டும் தனியா போட்டியிட்டு 10 சீட்டு முதலில் ஜெயிக்கட்டும். அப்படி மட்டும் நடந்தா நான் இனி என் வாழ்நாளில் அரசியுல் பேசுறதையே நிறுத்திடறேன். – ரங்கராஜ் பாண்டே.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.














