இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.25 உயர்ந்து கிராம் ரூ.14065க்கும் சவரன் ரூ.112520க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.250க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.250000க்கும் விற்பனை ஆகிறது.
- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
- இந்திய அளவில் பொருட்கள் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது: ஒன்றிய அரசு அறிவிப்பு
- “அதிகளவில் நச்சு உலோகங்கள்!” பாகிஸ்தான் தயாரிப்பு அழகு சாதனக் கிரீம்களுக்கு இந்தியாவில் அதிரடித் தடை!
- குறுகிய காலத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது கேலிக்கூத்தானது. வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் – மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
- அரபிக்கடலில் இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர்க்கப்பல்: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா கடும் கண்டனம்!
- சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக முதலாமாண்டு முதுகலை படித்து வரும் தலித் மாணவர் நவீன், கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்களுக்குப் பிறகு விசாரணையின்றி சேர்க்கை ரத்து செய்யப்பட்டு நீக்கம் செய்யப்பட்டடுள்ளார். 2024–2026 கல்வியாண்டில் மாணவர்கள் உரிமை சார்ந்து பல போராட்டங்களை நடத்திய நவீன் , நடத்தை விதிகளைக் கடுமையாக மீறியதாகக் கூறி நீக்கம் செய்வதாக பல்கலை நிர்வாகம் விளக்கம்.
- டெங்கு மற்றும் வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில் கர்ப்பிணி பெண்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும் என அணைத்து மாவட்ட சுகாதார இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.









