இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.03.2026 – வெள்ளிக்கிழமை

- ஒருவரை ஓபிசி கிரீமிலேயர் அல்லது நான்ஓபிசி கிரீமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூகநிலை மற்றும் சேவைநிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான நடைமுறை கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- எல்பிஜி கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்ஒர்க் மற்றம் இணைய சேவைகள் பாதிக்ப்படலாம் என தொலைத்தொடர்பு நிறுவுனங்கள் உஎச்சரிக்கை. பல பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் டேட்டா சென்டர்களுக்கு எல்பிஜி மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால் தட்டுப்பாடு நீடித்தால் செயலிழக்க வாய்ப்புள்ளதாக அச்சம்.
- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கத் தீர்மானத்தில் 193 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல். இதனை இன்ற மக்களவை அல்லது மாநிலங்களவையில் சமர்ப்பிக்க வாய்ப்பு
- அஜீத்குமாரின் ரேசிங் ஆர்வத்தை பாராட்டி மகேந்திரா நிறுவனம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள World-first Formula E themed SUV காரை பரிசாக வழங்கியது.
- 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என செங்கொட்டையன் உறுதி.
- ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்ல இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்ததாக பரவிய செய்திக்கு இந்தியா வெளியுறவ அமைச்சகம் மறுப்ப.
- தன்னை உருளைக்கிழங்கு – பொட்டேட்டோ என திட்டிய முதலாளி மீது தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.29 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்.
- 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பெறலாம் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தி நகல்களைப் பெற முடியும் என தெரிவிப்பு.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.70 குறைந்து கிராம் ரூ.14900க்கும் சவரன் ரூ.119200க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.290க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.290000க்கும் விற்பனை ஆகிறது.












